Tamil Movie Ads News and Videos Portal

திருச்சிற்றம்பலம்- விமர்சனம்

இந்த உலகம் பெருங்காதலால் ஆனது என்பதை திருச்சிற்றம்பலம் உறுதிசெய்து அனுப்புகிறது. காதல் அள்ளித்தரும் உணர்வுகளை திரையில் கொண்டு வருவது பெரும் சவால். அச்சவாலை அழகாக எதிர்கொண்டு வென்றிருக்கிறார் இயக்குநர் ஜவகர் மித்ரன்

Food டெலிவரி செய்யும் தனுஷுக்கு அப்பா பிரகாஷ்ராஜ், தாத்தா பாரதிராஜா, நண்பி நித்யாமேனென். இவர்கள் தான் தனுஷின் உலகம். வழிய வழிய நட்பைச் சிந்தும் தன் தோழியிடமே காதலுக்கான ஐடியா கேட்கிறார் தனுஷ். அந்த நேரத்தில் பாரதிராஜா ஓர் ஐடியா தர. அந்த ஐடியா தனுஷுக்கு எப்படி வொர்க்கவுட் ஆகிறது என்பதே படத்தின் கதை

தனுஷுக்கு இந்தக் கேரக்டர் ஜஸ்ட்லைக் தட் என்பதால் அட்டகாசமாக செய்திருக்கிறார். எமோஷ்னல் காட்சிகளில் யாரடி நீ மோஹினி மற்றும் வி.ஐ. பி தனுஷ் தெரிகிறார். படத்தின் ஆணிவேராக இருக்கிறார் நித்யாமேனென். அடடா என்னவொரு நடிப்பு. அவர் வரும் ப்ரேம் எல்லாமே ப்ரேம் பண்ணி வைக்கலாம் போல. பாரதிராஜா அடிக்கும் ஒன்லைனர்கள் படத்தின் மற்றொரு பாசிட்டிவ். பிரகாஷ்ராஜ் எப்போதுமே பிரகாசராஜ் தானே. பின்னிட்டார். பிரியாபவானி சங்கர், ராஷி கண்ணா இருவருமே கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்

நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகான இணைவு என்பதாலோ என்னவோ அனிருத் ஸ்பெஷல் எபெக்ட் போட்டு உழைத்திருக்கிறார். ஒவ்வொரு ப்ரேமிங்கும் அழகாக பார்த்து பார்த்து வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

நட்புக்கும் காதலுக்குமான கோடுகளை கொண்டு எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் அதை இரண்டு மணி நேரம் போரடிக்காமல் கடத்தியிருக்கிறார் இயக்குநர். படத்தில் தொய்வே இல்லை என்றாலும் முடிவு முன்னமே தெரிந்து விடுகிறது. ஆனாலும் அது நம்மை டிஸ்டர்ப் செய்யவே இல்லை. அவ்வளவு அழகான திரைக்கதை இப்படத்திற்கு வாய்த்திருக்கிறது. நிச்சயமாக திருச்சிற்றம்பலம் தான் இந்த வீக் வின்னர்

3.5/5
-மு.ஜெகன் கவிராஜ்

#Thiruchitrambalam