Tamil Movie Ads News and Videos Portal

விசில் மஹாலக்‌ஷ்மியாக கலக்கும், நடிகை கீர்த்தி ஷெட்டி !

காதலர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில், நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் “தி வாரியர்” படத்தில், கீர்த்தி ஷெட்டி தோற்றத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் கீர்த்தி ஷெட்டி, சர்ட் & ஜீன்ஸுடன் ஸ்கூட்டர் ஓட்டிக்கொண்டிருக்கிறார். கீழே கீர்த்தி ஷெட்டி இப்படத்தில் தோன்றும் கதாப்பாத்திரத்தின் பெயரான விசில் மஹாலக்‌ஷ்மி எனும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக வெளியான ராம் பொத்தினேனி உடைய தோற்றத்தின் ஃபர்ஸ்ட் லுக், மற்றும் டைட்டில் லுக் போன்றே இந்த ஃபர்ஸ்ட் லுக்கும், ரசிகர்களிடம் நேர்மறை அதிர்வை பரப்புவதாக அமைந்துள்ளது. திரையரங்குகளில் படம் வெளியாகும் போது ரசிகர்களுக்கு கோலாகலமான ஆக்சன் விருந்து காத்திருப்பது உறுதியாகியுள்ளது.

Srinivasaa Silver Screen பேனர் சார்பில் ஸ்ரீநிவாசா சித்தூரி பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்க, பவன் குமார் இப்படத்தை வழங்குகிறார். 2021 ஆம் ஆண்டில் மிகப்பெரும் வெற்றிபெற்ற ‘சீடிமார்’ படத்தினை தயாரித்த இந்நிறுவனத்தின் அடுத்த படைப்பு, “தி வாரியர்” என்பது குறிப்பிடதக்கது.

இப்படத்தில் ஆதி பினிஷெட்டி இதுவரை பார்த்திராத வித்தியாசமான வில்லன் வேடத்தில் நடிக்கிறார். அக்‌ஷரா கௌடா மிக சுவாரஸ்யமான, முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார். இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.