எழுத்தில் எந்த உள்நோக்கமும் உள் வன்மமும் இல்லாதவர்களுக்கே மொழி வாய்க்கும். கி.ரா-வுக்கு இப்படியான மொழி வாய்த்து அது பால்பாயசம் போல இனிப்பதற்கு அவரின் கபடமில்லா மனிதப்பார்வை தான் காரணம்
கோழிக்குஞ்சுவளை கொத்தி தூக்கிட்டுப் போற கழுகை நாங்க கள்ளப்பருந்துன்னு சொல்வோம்.
அதே பருந்து ராமர் கோயிலுக்கு மேல சுத்துனா கருடன்னு சொல்லி கும்பிட்டு வைப்போம்..
இருக்க இடத்தைப் பொறுத்தும், செய்ற செயலைப் பொறுத்தும் நம்ம பார்வை மாறுது. இந்த நூல்ல உள்ள கதைகளும் அப்படித்தான்.
அங்குவை, பாலய்யாவை, கோமதியை, பப்புத்தாத்தாவை எல்லாம் ஒருநேரம் ரசிச்சுப் பார்க்கிறோம். ஒருநேரம் வெறுத்து ஒதுக்கிறோம். நாம ஓணான் நிறம் மாறுத மாதி மாறாம இருக்கணும்னா நமக்குள்ள என்ன இருக்கணும்? அன்பு இருக்கணும். அதை இந்தக் கதைவ நேரடியா சொல்லல. ஆனா கதையில ரத்தமும் சதையுமா வர்ற சில மனிதர்களை சில மனிதர்கள் நடத்துற விதத்தைப் பார்த்ததும் நம்ம மனசுல ஒரு ஈவு தோணுது. அதன்மூலமா கி.ரா சொல்ல வார அன்பு நோக்கத்தை புரிஞ்சிக்கலாம். அந்த ஈவிரக்கம் ஓரளவு அன்பை பெருக்கும்னு நம்புறேன்.
கி.ராவின் இந்த தேர்ந்தெடுத்த சிறுகதைகள் தமிழ் சமூகத்தின் பொக்கிசம்