சின்னத்திரை நாயகியாக இருந்து தற்போது வெள்ளித்திரை நாயகியாக உயர்ந்திருப்பவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். இவரை டிவிட்டரில் பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டும். இந்த கொரோனா பாதிப்பால் வீட்டில் முடங்கி இருக்கும் பல நாயகிகளும் ஆன் லைனில் தங்கள் ரசிகர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகின்றனர். அந்த வரிசையில் ப்ரியாவும் நேற்று ஆன் லைன் சாட்டில் தனது ரசிகர்களை சந்தித்தார்.
அதில் ரசிகர்கள் கேள்விக்கு பதில் கொடுத்த ப்ரியா இறுதியில் நித்தியானந்தாவின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, அதில் “இந்த உலகிற்கு உங்களைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை” என்றும் கருத்து வெளியிட்டிருக்கிறார். இதன் மூலம் அவர் தான் நித்தியானந்தாவை பின்பற்றுபவள் என்பதை அறிவித்திருக்கிறாரா..? என்ற கேள்வி எழுந்துள்ளது.