மணிமாறன் இயக்கியுள்ள சங்கத்தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நேற்று கருணாஸின் பேச்சு அதகளமாக இருந்தது. கருணாஸ் இப்படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். உதயகுமார் தயாரித்துள்ள சங்கத்தலைவனை வெற்றிமாறன் வெளியிடுகிறார். விழாவில்
நடிகர் கருணாஸ் பேசியதாவது,
“நான்கு வருடம் ஆகுது. சினிமா நிகழ்வில் பேசி. நேற்று இரவு இந்தியன்2 படப்பிடிப்பில் உயிர் இழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுபாதபங்கள். வெற்றிமாறன் ,மணிமாறன் இருவரும் அந்தக் காலத்தில் இருந்தே நல்ல நண்பர்கள். கதை டிஸ்கசன் போது இருவரும் அடித்துக் கொள்வார்கள். அந்தளவிற்கு ஆக்கப்பூர்வமான கதை விவாதம் செய்வார்கள். நான் பார்க்கும் உண்மையான மிகச்சில மனிதர்களில் வெற்றிமாறன் ஒருவன். சட்டமன்றத்தில் நிறையபேர் நல்ல நடிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நம்மை விட நல்லா நடிக்கிறார்கள். அதனால் நாம் சினிமாவிற்கே வந்து விடுவோம் என்ற முடிவுக்கு வந்தேன். நான் வெற்றிமாறனிடம் நடிக்கப் போகிறேன் என்றதும் அவர் மறுத்தார். பின் இந்தக்கதைக்கு நீங்க சரியா இருக்க மாட்டீங்க என்றார். பிறகு ஒரு கேடக்டரை உருவாக்கி இருக்கிறார்கள். சமுத்திரக்கனி நடிக்க சம்மதிக்கா விட்டால் இந்தப்படம் உருவாகி இருக்காது.
இன்று சட்டமன்றக் கூட்டத்தொடர் இருக்கு. இருந்தாலும் ரொம்ப நாளைக்கு பிறகு படம் நடிப்பதால் இன்று வந்தேன். நிகழ்ச்சித் தொகுப்பாளனி ரம்யா மிகச்சிறப்பாக நடித்துள்ளார். அறம் படத்தில் நடித்த நடிகை மிகச்சிறந்த நடிகை. மணிமாறன் சொன்னதை சொன்ன நேரத்தில் சரியாக எடுத்துள்ளார். என்னப்.பாடகனாக அடையாளப்படுத்தியவன் உதயா. இந்தப்படத்தின் வியாபாரத்தை வெற்றமாறன் ஆல்ரெடி முடித்துள்ளார். நாளைக்கு எனது பிறந்தநாள். நான் 50 வயதுவரை வாழ்ந்ததே பெருசு தான். என் நண்பர்கள் வெற்றிமாறன், மணிமாறன், உதயகுமார் ஆகியோருடன் பணியாற்றியது மகிழ்ச்சி. எனக்குப் பிறந்தநாள் பரிசு இந்த சங்கத்தலைவன் படம் தான்” என்றார்.