இந்த செய்தியைப் படிக்கும் தமிழ் மக்களுக்கு உடனே கொரோனா நிவாரண நிதிக்காக சிரஞ்சீவி, நாகர்ஜூனா, மகேஷ்பாபு, அல்லு அர்ஜூன், ராணா டகுபதி, பிரபாஸ் போன்றோர் கோடி கோடியாக நிதி கொடுத்ததற்கு நன்றி பாராட்டியிருப்பார் பிரதமர். நம் நடிகர்கள் தான் அவர்களோடு பணியாற்றும் தொழிலாளர்களுக்கே உதவ முன்வரவில்லையே. இவர்கள் எப்போது நாட்டுக்கு கோடி கோடியாக கொடுத்து, அதற்கு எப்போது பிரதமர் தமிழில் நன்றி சொல்லப் போகிறார். என்கின்ற ஏக்கபெருமூச்சு வரும் தான். ஆனால் செய்தி அதைப்பற்றியதல்லை. தெலுங்கு இசையமைப்பாளர் கோட்டி இயக்கிய கொரோனா தொற்று விழிப்புணர்வு பாடலில் நடிகர் சிரஞ்சீவி, நாகர்ஜூனா, வருண் தேஜ் மற்றும் சாய்தரண் தேஜ் ஆகியோர் தங்கள் வீட்டில் இருந்தபடியே எடுத்த வீடியோக்களை அனுப்பி இருந்தனர். அதை எடிட் செய்து பாடலில் பயன்படுத்தி இருந்தார்கள். இந்தப் பாடலினை தெலுங்கு டிடி சேனல் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பயன்படுத்தியதோடு, அதன் லிங்கை தங்களது டிவிட்டர் தளத்திலும் வெளியிட்டது. அதைப் பார்த்த பிரதமர் ட்விட்டரில் தெலுங்கு நடிகர்களுக்க் தெலுங்கில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “சிரஞ்சீவி, நாகர்ஜூனா, வருண் தேஜ், சாய்தரண் தேஜ் உங்கள் அற்புதமான மெசெஜுக்கு நன்றி. வீட்டிலேயே இருங்கள் சமூக விலகலை கடைபிடியுங்கள். கொரோனாவை வெல்வோம்” என்று கூறியிருக்கிறார்.