போலீஸ் கதையில் மேலும் ஒரு க்ரைம் திரில்லர்
காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு சென்னையில் இந்தந்த இடங்களில் குற்றங்கள் நடக்கப்போகிறது என ஒரு நபர் போன் செய்கிறார்! அவர் சொல்வது போலவே குற்றங்கள் நடக்கின்றன. போன் செய்தவர் யார்? குற்றங்கள் தடுக்கப்பட்டனவா? என்பதே தீர்க்கதரிசி கதை
அஜ்மல் போலீஸ் அதிகாரியாக கம்பீரம் காட்டியுள்ளார். கதைக்கு தேவையில்லை இருந்தாலும் நாயகியை திணித்து கமர்சியலாக எதாவது செய்யலாம் என்று நினைக்காமல் ஹீரோயினையே தவிர்த்திருக்கிறார்கள். சத்யராஜ் கேரக்டர் பெரும் ஏமாற்றம்.
படத்திற்கான பரபரப்பை பின்னணி இசை கூட்டுகிறது. ஒளிப்பதிவும் நேர்த்தியாக அமைந்துள்ளது.
படம் துவங்கியதும் பரபரவென காட்சிகள் நகர்ந்து நம்மை கட்டிப்போடும் ஸ்கிரீன் ப்ளே படம் மீதான பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. அந்த எதிர்பார்ப்பை முன்பாதி வரைக்கும் தக்க வைத்தவர்கள் பின்பாதியில் சறுக்கி விட்டார்கள். முதல் பாதியில் தீர்க்கமாக இருந்த நேர்த்தியான திரைமொழி பின்பாதியிலும் இருந்திருந்தால் படத்தை தரிசித்திருக்கலாம். என்றாலும் இந்தப்படம் தமிழில் ஓர் நல்ல முயற்சி
2.75/5
-மு.ஜெகன் கவிராஜ்
#Theerkadarishi #தீர்க்கதரிசி