சாதா டாக்டர் போலீஸாக மாறி தாதா வில்லனை போட்டுத்தாக்கும் கதை
நீ……ண்ட இடைவெளிக்குப் பிறகு லிங்குசாமி இயக்கியிருக்கும் படம் என்பதால் சினிமாவுலகம் இந்தப்படத்தை ரொம்பவே எதிர்பார்த்து காத்துக் கிடந்தது. அந்தக்காத்திருப்பிற்கு நியாயம் சேர்த்திருக்கிறாரா லிங்கு?
ஆக்ஷன் என முடிவெடுத்து இறங்கிவிட்டதால் திரையெங்கும் ஏறி அடித்திருக்கிறார்கள். ராம் பொத்தினேனி பொங்கி வெடித்திருக்கிறார். ஆக்ஷன், காதல், காமெடி என எல்லா நடிப்பும் கை கூடி வருகிறது அவருக்கு. அவருக்கு நேரெதிர் கேரக்டரில் ஆதி பாதி படத்தை தாங்கி நிற்கிறார். கீர்த்தி ஷெட்டி அழகு பாதி நடிப்பு மீதி.
தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் வாரியாரின் எனர்ஜியை வாரித்தந்துள்ளது. குறிப்பாக புல்லட் பாடல் புல்லட்டாக பாய்கிறது. ஒளிப்பதிவில் நல்ல தரத்தை மெயிண்டெயின் செய்துள்ளார்கள். மேக்கிங்கில் லிங்குசாமி தானொரு கிங் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.
வழக்கமான ஹீரோ வில்லன் கதைதான் என்றாலும் தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடும் வகையில் மாஸ் ஏற்றியிருக்கிறார் லிங்குசாமி. ஆனால் திரைக்கதையில் தான் பாஸ் ஆவதற்கே போராடியிருக்கிறார். இருந்தாலும் சிலபல சமரசம் செய்து ஒரு முறை பார்க்கலாம் என்ற கேட்டகிரிக்குள் வந்து தப்பிக்கிறார் தி வாரியார்
3/5
-மு.ஜெகன் கவிராஜ்