ஆர்.ஆர்.ஆர், விக்ரம் என தொடர் வெற்றிகளை பெற்று வரும் தமிழ்சினிமா வரிசையில் தற்போது தி வாரியர் என்ற படமும் இணையும் என்ற எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் இன்று சென்னையில் நடைபெற்ற அந்தப்படத்தின் பிரம்மாண்டவிழா. அவ்விழாவில், தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த படைப்பாளிகள் கலந்து கொண்டனர். பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர், எஸ்.ஜே சூர்யா, பாலாஜி சக்திவேல், ஆர்.கே செல்வமணி, கார்த்திக் சுப்புராஜ், ரா.பார்த்திபன், சிறுத்தை சிவா, வசந்தபாலன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இத்தனை பேரின் பங்களிப்பால் படத்தின் ஹீரோ ராம் பொத்தேனி, இயக்குநர் லிங்குசாமி உள்பட படக்குழு மொத்தமும் மகிழ்ந்து நெகிழ்ந்து போனது.
தமிழ்சினிமா சமீபத்தில் இப்படியொரு பிரம்மாண்டமான விழாவை கண்டதில்லை என திரையுலகினர் பெருமைகொண்டனர்