தளபதி விஜய் தற்போது ‘மாநகரம்’, ‘கைதி’ படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அவரின் அடுத்த படத்தை இயக்கப் போகும் இயக்குநர் யார் என்கின்ற கேள்வி ரசிகர்கள் மனதில் மேலெழுந்து வருகிறது.
ஏற்கனவே கத்தி, துப்பாக்கி, சர்கார் என மூன்று படங்கள் விஜய் –யுடன் பணியாற்றிய இயக்குநர் முருகதாஸ், எங்க வீட்டுப் பிள்ளை, கடைக்குட்டி சிங்கம் என்று இரண்டு குடும்பப்பாங்கான வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குநர் பாண்டிராஜ் ஆகியோர் விஜயின் புதிய படத்தை இயக்கவிருக்கும் நடிகர்களின் பட்டியலில் முன்னணியில் இருக்க, தற்போது ‘சூரரைப் போற்று” இயக்குநர் சுதா கொங்கராவும் இந்த பட்டியலில் இணைந்து இருக்கிறார். ‘சூரரைப் போற்று’ கதைக்களத்தைப் பற்றி கேள்விப்பட்ட விஜய், சுதாவிடமும் கதை கேட்கலாம் என்கின்ற எண்ணத்தில் இருப்பதாக தெரிகிறது.