ப்ரியதர்ஷண் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், சுனில் ஷெட்டி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அரபிக்கடலிண்டே சிம்ஹம்’. இப்படம் வரும் மார்ச் 26ல் வெளியாகவிருக்கிறது. இப்படம் பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியாவின் கடற்பகுதிகளில் வாணிபம் நடத்தி வந்த மரைக்காயர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது.
இவர்கள் அக்காலத்தில் கடற்படை தலைவர்களாகப் பார்க்கப் பெற்றவர்கள். இதில் மோகன்லால் குஞ்சலி மரைக்காயர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆர்ச்சா என்னும் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகவிருக்கும் இத்திரைப்படம் கிட்டத்தட்ட 100 கோடி செலவில் உருவாகியுள்ளது. படம் வெளியாகவிருப்பதை தொடர்ந்து, இப்படத்தின் புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.