உங்களிடம் சேர்ந்த செல்வத்தின் மூலம் நீங்கள் வாங்க முயலும் இதர ஆடம்பரப் பொருள்களைத் தவிர, அந்தச் செல்வத்தின் மூலம் நீங்கள் சேர்க்கும், காலமும் தேர்வுகளுமே ஒப்பிடதற்கரிய பொருள்களாகும்”
இந்த நூலில் கொண்டாட வேண்டிய வரிகள் இவை👆👆 சேமிப்பு காலத்தை கூட நம் கன்ட்ரோலில் வைக்கும்
ஆறு மாத சேமிப்பு பேக்கப் இருந்தால் தற்போது உவப்பின்றி செய்யும் வேலையை உதறித்தள்ளி விட்டு வேறு வேலைக்குச் செல்லலாம்..அதற்கு ஆறுமாத செல்வ பேக்கப் என்பது அவசியம். அந்தச் சேமிப்பை எப்படி பழக்கப்படுத்துவது? மார்கன் ஹெளஸ்ஸேல் சொல்கிறார்
“வீடு, கார் என்ற எதோவொரு இலக்குக்காக மட்டும் சேமிக்காதீர்கள். சேமிப்பிற்கு காரணம் தேவையில்லை”
மேலும் பண நிர்வாகம் என்பது தான் மன நிர்வாகத்தை ஒழுங்காக வைத்திருக்கும்..பாக்கெட் வெயிட்டாக இருக்கும் போது உள்ள மனநிலை நிச்சயமாக அல்டிமேட் தான். நான் கொரோனா நேரத்தில் தள்ளாடிய போது ஒரு அண்ணன் ஒரு தற்சமய வேலை வாங்கித்தந்தார். சின்னதாக சம்பளம் வந்ததும் பெரிதாக நம்பிக்கை வந்தது. அப்போது அவர் சொன்னார், “பணம் தர்ற நம்பிக்கையை உலகத்துல யாராலும் தர முடியாது” இந்த வார்த்தை சற்று கடினமாக தெரிந்தாலும், எமோஷ்னல் அற்ற தன்மையாகத் தெரிந்தாலும் இன்று உண்மையான எமோஷ்னலை கூட பணம் தான் தீர்மானிக்கிறது என்பது உண்மையே!
நான் காஞ்சிபுரத்தில் கயலாங்கடை வியாபாரம் செய்கையில் அங்கு ஒரு சங்கம் நடத்தினார்கள். சிவாண்ணன் என்னை அதில் சேரச்சொல்லி எவ்வளவோ சொன்னார். நான் அசால்டாக மறுத்துவிட்டேன். இன்று அந்தச் சங்கத்தின் வளர்ச்சியும் வைப்பு நிதியும் வேறலெவலில் இருக்கிறது. சங்க உறுப்பினர்களுக்கு அவ்வப்போது தங்கமெல்லாம் கொடுக்கிறார்கள். நம்மிடம் இருக்கும் சிறுதொகையை (100 ரூபாய் தானே) அசால்டாக எண்ணி செலவு செய்துவிடும் போக்கு நிச்சயமாக பேராபத்து. சிறுதுளி பெரு வெள்ளம் என்பதை உணர்ந்து சேமிக்கும் பழக்கத்தை கொள்ள வேண்டும். வயது 35+ வந்துவிட்டது எனக்கு. இன்னும் கணக்குப் போட்டு வாழ்த்தெரியவில்லை. இனி தெரிந்துகொள்ள வேண்டும் என அவாவினைத் தந்தது சகோதரி அன்னலெட்சுமி அன்பளித்த இந்த நூல்
நெகட்டிவ் சம்பவங்களை பாசிட்டிவாக மாற்றுவதற்கு இந்நூலில் ஒரு சம்பவத்தைச் சொல்லியுள்ளார் நூலாசிரியர். “ஒருவர் எப்போதெல்லாம் கோபப்படுவாரோ அப்போதெல்லாம் பத்து ரூபாயை உண்டியலில் போட்டாராம். ஒரு கட்டத்தில் அது ஒரு வீடு வாங்கும் அளவிற்கு சேர்ந்ததாம்” இது சுவாரஸ்யத்திற்காகச் சொல்லப்பட்டாலும், இதில் ஒரு நல்ல செய்தி இருக்கிறது. மேலும் நூலெங்கும் உலக நாடுகளின் பொருளாதார வீழ்ச்சி எழுச்சி வரலாறு ஆகிய தகவல்களும் இருக்கின்றன. 1950-க்கு பின் மக்களுக்கு வங்கிகள் கடன் கொடுத்து பழக்கப்படுத்தியதன் மூலம் மக்களின் வாங்கும் ஆசை கூடியதும், அதன்பின் வளர்ச்சி நிலையை நோக்கி சமூகம் அடியெடுத்ததையும் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
கோபிநாத் ஒருமுறை சொன்னார், “இந்த உலகத்தின் மீது உனக்கு பாசம் இருக்கு என்று காட்ட வேண்டுமானால் அதற்கும் பணம் தேவை”
சத்திய வார்த்தை இது.
எங்கள் முதலாளி ராஜேந்திர ராஜன் சார் அடிக்கடி சொல்வார், “கடவுள் உன் கையில் நிறையவோ குறையவோ ஒரு பண பாக்ஸை தந்துட்டு நீ என்ன பண்றன்னு கவனிச்சிட்டே இருப்பார். அதை நீ சரியா நிர்வாகம் பண்ணுனன்னா உடனே அடுத்த பாக்ஸை தருவார். அதோட மதிப்பை கண்டுக்கலன்னா அடுத்து பாக்ஸே வராது” என்பார்
ஒரு ரூபாய் என்றாலும் அதுவும் பணம் என்று உணரணும். எதிர்வீட்டில் தேங்காய் உடைத்தால் நம் வீட்டிலும் எதையாவது உடைக்க வேண்டும் என்று முண்டு கட்டினால் நம் மண்டை உடையவும் வாய்ப்பு உண்டு. மதிப்பு என்பதை குணத்தாலும் மனத்தாலும் பெற முடியும். அதற்காக கடன் வாங்கி பொருள் சேர்க்க வேண்டிய அவசியமில்லை🙏
Finally வாசிப்பைப் போல சேமிப்பையும் நேசிப்போம்