Tamil Movie Ads News and Videos Portal

இன்று மிக முக்கியப் பிரச்சனை “அப்பா பெயர் கேட்பது தான்” – இராதாரவி

தொடர்ச்சியாக சர்ச்சையை ஏற்படுத்துவது போல் பேசி வருகிறார் நடிகர் இராதாரவி. இப்பொழுது சென்னையில் ஒய்.ஜி.மகேந்திரன் நாடக நிகழ்ச்சி விழாவில் பேசிய நடிகர் இராதாரவி, தற்போது நாட்டில் மிக முக்கிய பிரச்சனை ‘ஒருவரிடம் அவரின் அப்பா பெயரைக் கேட்பது தான். அப்பா பெயரைக் கேட்டாலே பலருக்கு பயம் வந்துவிடுகிறது. சிலர் அப்பா யார் என்று கேட்டுவிடுவார்களோ…” என்கின்ற பயத்துடன் வாழ்ந்து வருகிறார்கள்.

மத்திய அரசு கொண்டு வரவுள்ள என்.ஆர்.சி மற்றும் சி.ஏ.ஏ போன்ற சட்ட வரைவுகளால் எந்தப் பிரச்சனையும் யாருக்கும் இல்லை. முதல்வர் பழனிச்சாமி ஏதேனும் முஸ்லீம்கள் தாங்கள் இந்த வரைவுகளால் பாதிக்கப்படுவோம் என்று நினைத்தால் என்னிடம் வந்து விளக்கம் கேட்கலாம் என்று அறிவித்தார். யாரேனும் வருவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் யாரும் வரவில்லை/ என்று கூறியுள்ளார்.” இராதாரவி பேசியதும் சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி ஆகியவற்றை முன் வைத்து என்றாலும் கூட அவர் இலை மறை காயாக ஏதோவொரு நாயகியை வம்புக்கு இழுக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.