Tamil Movie Ads News and Videos Portal

சாய்பல்லவி கொடுத்த முத்தம்

நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு பல புதிய படங்கள் தொடர்பான அறிவிப்புகள் மற்றும் வெளியாகவுள்ள படங்களின் பர்ஸ்ட் லுக், டீஸர் போன்றவை வெளியாகி அமர்களப்படுத்தின. அந்த வகையில் தெலுங்கில் நாகர்ஜூனாவின் மகனும், சமந்தாவின் கணவருமான நாகசைத்தன்யா சாய் பல்லவியுடன் இணைந்து நடித்திருக்க்கும் ’லவ் ஸ்டோரி’ படத்தின் “ஏய் பில்லா” என்று தொடங்கும் பாடல் ஒன்று நேற்று வெளியானது.

அதில் ஒரு காட்சியில் சாய்பல்லவி நாகசைத்தன்யாவிற்கு முத்தம் கொடுப்பதும், அதற்கு நாகசைத்தன்யாவின் ரியாக்ஷனும் இடம் பெற்றிருந்தன. வெகு க்யூட்டாக அமைந்திருந்த அந்தக் காட்சி இப்பொழுது இணையத்தில் வைரலாகி அனைவரும் அதனை ஷேர் செய்து வருகின்றனர். சேகர் கம்முலா இயக்கியுள்ள இந்தப்படம் அழகான காதல் கதையாக நகரம், கிராமம் இரண்டின் பின்னணியில் உருவாகிவுள்ளது.