‘சாட்டை’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி இன்று வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவராக மாறி இருப்பவர் நடிகை மகிமா நம்பியார். இவர் ‘குற்றம் 23’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ மற்றும் மகாமுனி எனப் பல படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார். இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “இன்சோம்னியாவை வெல்வதற்கு” என்று டேக் இடப்பட்ட யோகாக்களின் தொகுப்பு அடங்கிய புகைப்பட பதிவை வெளியிட்டதோடு, “எனக்கு இப்பொழுது இது தேவையாக இருக்கிறது” என்றும் தெரிவித்துள்ளார்.
‘இன்சோம்னியா என்பது இரவு நேரங்களில் தூக்கம் இல்லாமல் தவிக்கும் நோய்க்கூறு ஆகும். முன்னணி நட்சத்திரங்கள் பலர் இந்த நோயால் அவதிப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.