கெளதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி, ஜான் விஜய், பால சரவணன், ஷாரா, மதுமிதா மற்றும் பலர் நடிப்பில் 2018ம் ஆண்டு மே மாதம் வெளியான திரைப்படம் “இருட்டு அறையில் முரட்டுக் குத்து”. இப்படத்தை சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கி இருந்தார். அடல்ட் காமெடி ஜானரில் உருவான இப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்தாலும் கூட, படத்தை தயாரித்த ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்திற்கு இப்படம் நல்ல லாபத்தைக் கொடுத்தது. இப்படத்தை அடுத்து ஆர்யா, சாயிஷா ஷேகல் நடிப்பில் வெளியான கஜினிகாந்த் திரைப்படம் பெரிதாக வரவேற்ப்பை பெறவில்லை. இந்நிலையில் “இருட்டு அறையில் முரட்டுக் குத்து” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத் தொடங்குவதோடு அதில் நாயகனாகவும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.