கமல்ஹாசன் அலுவலகத்தில் கமல் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஒரு ஸ்டிக்கரை சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஒட்டி விட்டது. காலையிலே இது பெரிய பரபரப்புச் செய்தியாக மாறிவிட்டது. நிலவரத்தை தீவிரமாக விசாரித்தால் நிறைய கதைகளைச் சொல்கிறார்கள். அதாவது கெளதமி சென்ற பத்தாம் தேதி வெளிநாட்டில் இருந்து ரிட்டர்ன் ஆனாப்லயாம்.
அவரோட பாஸ்போர்ட் முகவரி கமல் அலுவலக முகவரியாக இருந்ததால் தான் நிர்வாகம் தன் கடமையைச் செய்துள்ளதாம். அதற்குள் பரபரப்பிற்குப் பெயர் போன நமது மீடியாக்கள் கமலுக்கு கொரோனாவா? என்று செய்திகளைப் பரப்பத் துவங்கிவிட்டார்கள். அரசு கமலை இப்படி வச்சி செஞ்சதிற்கு காரணம் கமல் ட்விட்டரில் சகட்டு மேனிக்கு வச்சி செய்வது தானாம்