‘தளபதி vs இளைய தளபதி’ என்ற மாஸ் காம்போவில் ஒரு வெங்கட்பிரபு பிரியாணி இந்த கோட்
SATS என்ற உளவுத்துறைக்கும் மேலான ஒரு பிரிவில் வேலை செய்கிறார் விஜய். அவரின் நண்பர்களாக, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் உடன் பணியாற்றுகின்றனர். 2008 காலகட்டத்தில் அந்த வேலையில் இவர்கள் செய்யும் ஒரு சாகசம், 2024 கால கட்டத்தில் இவர்களை பாதிக்கிறது. அந்தப் பாதிப்பை ஹீரோ எப்படி எதிர்கொள்கிறார் என்பதாக படம் தடதடவென பயணிக்கிறது
விஜய்க்கு இது ஆல்டைம் ஹீரோயிச படம் எனலாம். மனிதர் பின்னியிருக்கிறார். அவரின் நடிப்புக்கு ஏற்ற எழுத்தை திரைக்கதையில் அழுத்தமாக எழுதியிருக்கிறார் வெங்கட் பிரபு. சபாஷ்! நடிப்பில், ‘தளபதி விஜய்யா? இளையதளபதி விஜய்யா?’ என்று போட்டி வைத்தால் இளைய தளபதியே வாகை சூடுகிறார்.
இளைஞன், நடுத்தர வயதுக்காரர், அங்கிள் லுக் என எல்லா கேரக்டரிலும் விஜய் தெறிக்கவிட்டுள்ளார். படமெங்கும் விஜயிசம்! பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், ஜெயராம் ஆகியோர் நல்ல நடிப்பை கொடுத்துள்ளனர். பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட மோகன் கேரக்டரை இன்னும் வலுப்படுத்தியிருக்கலாம். யோகிபாபு சற்று நேரம் என்றாலும் அசத்தலாக நடித்துள்ளார். சினேகா விஜய்யிடம் கொஞ்சும் போதும், மிஞ்சும் போதும் வசீகரா படத்தை நினைவூட்டி மகிழ்வூட்டுகிறார்.
படத்தின் பிரதான அம்சம் ‘டிஏஜிங் மற்றும் ஏஐ’தொழில்நுட்பம். விஜய்யை 2K கிட்-ஆக காட்டியுள்ள தொழில்நுட்பத்தில் துளியும் பிசிறில்லை. அடடா ரகம்! ஒளிப்பதிவாளர் சிறப்பான ப்ரேமிங்கால் படத்திற்கு பெருந்துணை செய்துள்ளார். CG சில இடங்களில் க்ரீன் அடித்தாலும் ஓகே தான். யுவனின் இசையில் பாடல்கள் பெரிதாக தேறவில்லை. பின்னணி இசையில் பெரிய குறையுமில்லை. எடிட்டர் ஒரு கால் மணிநேரத்திற்கு கத்தரி போட்டிருக்கலாம்
பழிக்குப் பழி வாங்கும் பழையகாலத்து கதை தான். அதை இன்றைய ரசனைக்கு ஏற்ப ட்ரீட் பண்ணி, ரசிகர்களுக்கு நல்ல ட்ரீட் கொடுத்துவிட்டார் VP. ஒரு மாஸ் ஹீரோவை எப்படி பயன்படுத்த வேண்டும், மற்ற ஹீரோக்களின் ரெபரன்ஸை எப்படி யூஸ் பண்ண வேண்டும், கேமியோ கேரக்டரை எப்படி ஸ்கோர் பண்ண வைக்கவேண்டும் என்ற வித்தையை எல்லாம் கச்சிதமாக கற்று வைத்து, படத்திற்குள் மொத்தமாக இறக்கியிருக்கிறார் VP.
வில்லனை வடிவமைத்த விதமும், விஜய் & கோ செய்யும் வேலையின் இலக்குகளையும் தெளிவாக சொல்லாதது படத்தின் ஒருகுறை. வில்லன் கேரக்டரை ஸ்ட்ராங்க் பண்ணியிருந்தால், ஹீரோ இன்னும் வனளாவாக ஸ்கோர் பண்ணியிருப்பார். க்ளைமாக்ஸில் அரை மணி நேரம் படம் செய்துள்ள மேஜிக், நமக்குத் தோன்றிய எல்லாக் குறைகளையும் மறக்கச் செய்து விடுகிறது
Mark my word. இந்த வருடத்தின் பெரிய ஹிட் இந்த கோட்
3.25/5
-மு.ஜெகன் கவிராஜ்