Tamil Movie Ads News and Videos Portal

முதல் அறிவிப்பே 70 இலட்சம்

தெலுங்கு திரைப்பட உலகின் முடிசூடா மன்னராக ஒரு காலத்தில் திகழ்ந்தவர் நடிகர் சிரஞ்சீவி. பின்னர் அவர் கட்சி தொடங்கி தீவிர அரசியல் களம் கண்டார். அரசியல் களம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியைத் தராததால், மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அவர் நடிப்பில் வெளியான ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தை தொடர்ந்து தற்போது ‘ஆச்சார்யா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் அவர் இரு தினங்களுக்கு முன்னர் தான் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கை தொடங்கினார். அவரது வழியில் அவரது மகனான ராம்சரணும் தனது டிவிட்டர் கணக்கை நேற்று அதிகாரப் பூர்வமாக தொடங்கியுள்ளார். தொடங்கியதோடு மட்டுமின்றி, அதன் முதல் அறிவிப்பாக கொரோனா நிவாரணப் பணிகளுக்கு ரூபாய் 70 இலட்சம் நிதி அளிப்பதாக அறிவித்துள்ளார்.