’பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘விசாரணை’, ‘வடசென்னை’ ‘அசுரன்’ இப்படி தன் ஒவ்வொரு படத்திலும் வேறு வேறு விதமான கதைக்களனை எடுத்துக் கொண்டு அதில் அசுரப் பாய்ச்சல் நிகழ்த்துபவர் இயக்குநர் வெற்றிமாறன். அவர் தற்போது நடிகர் சூர்யாவை நாயகனாகக் கொண்டு தமிழில் வெளியான ‘வாடிவாசல்’ நாவலை மையப்படுத்தி ஒரு படம் இயக்கவிருக்கிறார். மேலும் நகைச்சுவை நடிகர் சூரியை நாயகனாக கொண்டு ஒரு படத்தையும் இயக்க திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில் அவரது இயக்கத்தில் வெளியான வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் எப்பொழுது உருவாகும் என்ற கேள்வி இருந்து வந்தது. இந்தப் படத்தின் முதல் பாகம் வெளியான போது அது பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது. மேலும் படம் மிகப்பெரிய வசூல் சாதனையையும் நிகழ்த்தவில்லை. எனவே வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் வருமா..? என்றும் கேள்வி இருந்தது. அதற்கு பதிலளித்திருக்கும் வெற்றிமாறன், “வடசென்னை -2” வை வெஃப் சீரிஸாக இயக்கத் திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.