இந்த காலவரையற்ற ஊரடங்கை ஒவ்வொருவரும் எப்படி போக்குவது என்று தெரியாமல் முழித்து வருகிறார்கள். இப்படி ஒரு சூழ்நிலையை கனவிலும் எதிர்பார்த்திராத மக்களுக்கு இந்த காலத்தினை எப்படி கழிப்பது என்றே தெரியாமல் இருக்கிறது. அரசியல் பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் இந்த நேரத்தினை சமையல் செய்வது, வீட்டு வேலை செய்வது, தோட்டத்தை பராமரிப்பது என்று ஏதாவது வேலை செய்து போக்கி வருவதோடு அது தொடர்பான புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ நாயகன் துல்கர் சல்மான தன் அம்மாவுடன் இணைந்து சமையலறையில் சமைக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த கிரிக்கெட் வீரரும், துல்கரின் நண்பருமான சுரேஷ் ரெய்னா அந்த ரெஸிபியை எனக்கு அனுப்புங்கள்; நானும் முயற்சித்துப் பார்க்கிறேன்” என்று கமெண்ட் செய்துள்ளார்.