மலையாளத்தில் பிஜூமேனன் பிருத்விராஜ் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றிருக்கும் திரைப்படமும் “அய்யப்பனும் கோஷியும்” . பிரபல கதாசிரியரான சாச்சி இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் திரைக்கதை ஓய்வுபெற இருக்கும் போலீஸ் அதிகாரிக்கும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிக்குமான ஈகோ மற்றும் அவர்களுக்கு இடையேயான மோதல் ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் வெற்றியினால் இதன் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற பெரும் போட்டி நிலவியது. கடும் போட்டிக்கு இடையில் “ஜிகர்தண்டா, ஆடுகளம்” ஆகிய படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் கதிரேசன் இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றியுள்ளார்.