Tamil Movie Ads News and Videos Portal

முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் த்ரில்லராக கோவா காடுகளில் எடுக்கப்பட்ட படம் ‘தட்பம் தவிர் ‘

கந்தக்கோட்டை ‘, ‘ஈகோ’ படங்களை இயக்கிய தயாரிப்பாளர் இயக்குநர் சக்திவேல் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ‘தட்பம் தவிர்’ .

இது முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகி இருக்கிறது. துருவங்கள் பதினாறு, ராட்சசன் போல் யாரும் எதிர்பார்க்க முடியாத, யூகிக்க முடியாத அடுத்தடுத்த காட்சிகளோடு இப்படம் செல்லும். இப்படத்தை ஜெகன் நாராயணன் இயக்கியிருக்கிறார் .இவர் தயாரிப்பாளர் இயக்குநர் சக்திவேலிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். ‘பரதேசி’ ,’நான் சிவனாகிறேன்’ படங்களில் நடித்த கார்த்திக் அசோகன் நாயகனாக பிரதான வேடம் ஏற்றிருக்கிறார் .நாயகியாக மும்பை மாடல் பாயல் நடித்திருக்கிறார். மற்றும் புதுமுகங்கள் ஏராளமானவர்கள் நடித்துள்ளார்கள். ௹ல் பிரேக்கர்ஸ் புரொடக்ஷன் , தியா சினி கிரியேஷன், மேஜிக் லேண்டர்ன் புரொடக்ஷன் என்று மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு வசந்த்DFT, இசை – பிரசன்னா சிவராமன், பாடல்கள் கவிஞர் வி.ஜே.பி, கலை – பிரசாத்.எடிட்டிங் அர்ஜுன்.

முழுக்க முழுக்க கோவா காடுகளில் உருவாகியுள்ள இப்படம் , பார்ப்பவர்களைப் புதிய பின்புலத்தில் மகிழவைக்கும். காட்டுக்குள் தேன் நிலவுக்கு செல்லும் காதல் ஜோடி சில தீய சக்திகளிடம் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் தப்பித்தார்களா? எப்படி தப்பித்தார்கள்? என்பதைச் மிரட்டலாக சொல்லும் கதை.
இக்கதை முழுக்க முழுக்க திரில்லர் சஸ்பென்சாக ஒவ்வொரு காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், வெளிவந்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது, விரைவில் இப்படத்தின் டிரைலர்.