சென்ற மாதம் முழுவதும் ஹாட் டாப்பிக்காக இருந்த விஷயம் என்னவென்றால், விஜயின் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் வருமான வரித்துறை அதிகாரிகள் சென்று விஜயை விசாரணைக்காக பனையூர் பங்களாவிற்கு அழைத்துச் சென்றது தான். அதனையடுத்து அரங்கேறிய பா.ஜ.கவின் ஆர்ப்பாட்டம், விஜய் தன் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி ஆகியவை அனைவரும் அறிந்தது தான்.
இதனையடுத்து இந்தப் பிரச்சனை என்ன ஆனது என்று கேட்டால் தண்ணீர் தெளித்துவிட்டு விட்டார் விஜய் என்றால் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் இத்தனை களேபரங்கள் நடந்து முடிந்த நெய்வேலி சூட்டிங் ஸ்பாட்டை விட்டு விலகும் போது, விஜய் அவ்விடத்தில் ஒரு செடியை நட்டு, தண்ணீர் தெளித்துவிட்டு சென்றிருக்கிறார். இதனையே இயக்குநர் லோகேஷ் கனகராஜும் செய்ய, தற்போது அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.