சின்னத்திரை தொகுப்பாளினியான ரம்யா சமீப காலங்களில் திரைப்படங்களிலும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தும் வருகிறார். இவர் பிரியமாக வளர்த்து வந்த செல்ல நாய் மிலோ இறந்துவிட்டதாக ஒரு பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘என் செல்ல நாய் மிலோ உலகத்தை கொரோனா வைரஸ் அச்சுறுத்திக் கொண்டிருந்த போது, அதுவும் உடல் நலத்தால் பாதிக்கப்பட்டு இருந்தது. அதனைக் காப்பாற்ற அறுவை சிகிச்சை செய்த போதும் பயனின்றி இறந்துவிட்டது. என் மிலோ தான் என் குழந்தை, செல்லம், உலகம் எல்லாமே. என்னில் ஒரு பாதியை இழந்தது போல் உணர்கிறேன். என் மீது அன்பைப் பொழிந்த என் மிலோ இப்பொழுது இல்லை. எனக்கு சந்தோஷத்தைக் கொடுத்து என்னை பாதுகாத்த என் மிலோவிற்காக கடந்த ஒரு வார காலமாக பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி. என் மிலோவை நான் மிஸ் செய்கிறேன். அதை மீண்டும் சந்திப்பேன் என்கின்ற நம்பிக்கை இருக்கிறது” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.