நடிகர் அதர்வா இயக்குநர் கண்ணன் கூட்டணி ஓர் நட்புக்கூட்டணி. இருவரும் இணையும் படத்திற்கு இயல்பாகவே ஒரு எதிர்பார்ப்பு நிலவும். தற்போது தள்ளிப்போகாதே என்ற படத்தில் இருவரும் இணைந்துள்ளார்கள். இந்தப்படம் நிச்சயமாக வெற்றியை விட்டு தள்ளிப்போகாது என்ற நம்பிக்கையை நேற்று நடந்த இப்படத்தின் பிரஸ்மீட் உறுதிப்படுத்தியது. இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய கண்ணன் அதர்வா உள்ளிட்ட அனைவரும் படம் மிகச்சிறப்பாக வந்திருப்பதாக கூறினார்கள்.