‘தளபதி 65’ என்று அழைக்கப்படும் இப்படத்தில் விஜய்யுடன் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்த தகவல்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது, அந்த வகையில் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.
9ஆண்டுகள் இயக்குநர் கமலிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஷைன் டாம் சாக்கோ 2011ஆம் ஆண்டு வெளியான ‘காடம்மா’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து ‘ஈ அடுத்த காலத்து’, ‘அன்னையும் ரசூலும்’, ‘சாப்டர்ஸ்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடிச்சிருக்கார்.