Tamil Movie Ads News and Videos Portal

V.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் ‘தலைநகரம் 2’!

V.Z.துரை – சுந்தர்.C கூட்டணியில் வெளியான இருட்டு வெற்றி படத்திற்கு பிறகு மீண்டும் இருவரும் இணையும் படம் ‘தலைநகரம் 2’இயக்குனர் V.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் இப்படத்தை ரைட் ஐ தியேட்டர் தயாரிப்பு நிறுவனம் சார்பாக V.Z.துரை, S.M.பிரபாகரன் இருவரும் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்.

இயக்குனர் V.Z.துரை தயாரிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.இன்று இப்படத்தின் பூஜை இனிதே நடைபெற்றது.இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.