Tamil Movie Ads News and Videos Portal

தல ”அஜீத்” ஸ்டைலில் தளபதி ”விஜய்”

தளபதி விஜய் நாயகனாக நடித்து வரும் “மாஸ்டர்” படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஒரு இண்டோர் அரங்கத்தில் வைத்து நடைபெற்றது. இதில் ரசிகர்கள் யாரும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. இவ்விழாவில் பேசிய நடிகர் விஜய், “லோகேஷ் கனகராஜ் மாநகரம் படம் மூலம் கவனம் ஈர்த்தார். கைதி படத்தினை மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கிறார். “மாஸ்டர்” படத்தில் அவர் என்ன செய்திருக்கிறார் என்பதைப் பார்க்க உங்களைப் போல் நானும் காத்திருக்கிறேன்.

கொரோனோ வைரஸ் அபாயத்தினால் ரசிகர்களை அழைக்க முடியவில்லை. ரசிகர்களை அழைக்க வேண்டாம் என்கின்ற முடிவை வருத்தத்துடன் அரை மனதோடுதான் சம்மதித்தேன். வாழ்க்கை ஒரு நதி போல, சிலர் வழிபடுவார்கள், சிலர் வரவேற்ப்பார்கள்; சிலர் கல்லெறிவார்கள். நாம் அதைக் கண்டு கொள்ளாமல் போய்க் கொண்டே இருக்க வேண்டும். நண்பர் அஜீத் ஸ்டைலில் வரலாம் என்று எண்ணித் தான் இந்த விழாவிற்கு கோட் அணிந்து வந்துள்ளேன்.” என்று பேசினார்.