இந்திய கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் தொடர்புடைய கதைகளை மக்களிடையே கொண்டு சேர்ப்பது தான் சோனி லிவ்வின் தலையாய முயற்சியாகும்.இதன் தொடர்ச்சியாக தற்போது சோனி லிவ் OTT தளத்தில், சமூகத்தின் யதார்த்தங்களை எடுத்துக்காட்டுகின்ற கதையான விருது பெற்ற திரைப்படமான ‘தேன் ’ 25 ஜூன் அன்று வெளியாக இருக்கிறது.
அதிகாரத்துவ சிக்கல்கள் மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பு இல்லாமை ஆகியவை, சமூகத்தின் யதார்த்தத்தை எவ்வாறு வடிவமைக்கின்றன என்பதை படத்தின் காட்சிகள் மற்றும் வசனங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கணேஷ் விநாயகன் இந்த படத்தை இயக்கி உள்ளார். அம்பலவாணன் பி, பிரேமா. பி & ஏபி புரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.