Tamil Movie Ads News and Videos Portal

உளவியல் குற்றங்களைப் பின்னணியாக கொண்ட தடயம்

தடயம் படம் இயக்குநராக அறிமுகமாகும் மணி கார்த்திக் படம் பற்றி கூறியதாவது,

“தடயம் முதல் அத்தியாயம் உளவியல் குற்றங்களை பின்னனியியாக வைத்து அமைக்கப்பட்ட ஒரு psychological த்ரில்லர். போலிஸ் அதிகாரியாக வரும் மதிவாணனைச் சுற்றி நடக்கும் தொடர் கொலைகள் அதில் கிடைக்கும் திடுக்கிடும் தடயங்கள் அவரை மேலும் முன்னோக்கி நகர்த்த அதில் அவர் சந்திக்கும் இன்னல்கள், இறுதியில் எதிரியின் சதியை முறியடித்தாரா என்று முதல் அத்தியாயம் தொடர்கிறது. தமிழில் psychological த்ரில்லர் திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு தடயம் ஒரு நல்ல விருந்தாகும். தடயம் முதல் அத்தியாயத்தின் காட்சிகள் அனைத்தும் கொடைக்கானல் பிண்ணனியில் அமைக்பட்டுள்ளது . கதையின் நாயகனாக பென்குயின், சிந்துபாத் மற்றும் சேதுபதி படங்களில் நடித்த லிங்கா, ‘மதிவாணன்’ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒளிப்பதிவு – சுகுமாரன் சுந்தர் , படத்தொகுப்பு-விஐய் அன்டரிவ்ஸ், இசை – ஜோன்ஸ் ரூபர்ட் , ஒலி வடிவமைப்பு – அருன் காந்த், கலரிஸ்ட் – அனில் கிருஷ் என்று அனைவரும் தங்களது திறமையை விதைத்திருக்கிறார்கள். தடயம் முதல் அத்தியாயம் விறுவிறுப்பான ஒரு சஸ்பன்ஸ் திரில்லராக ரசிகர்கள் மத்தியில் வலம் வரும் என்பதில் எங்கள் படக்குழு நன்னம்பிக்கை கொண்டுள்ளோம். உங்கள் ஆதரவு தொடர்ந்து கிடைக்கவும் வேண்டுகிறோம்” என்றார்