கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நிறைய கோவில்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. முக்கிய பூஜைகள் தவிர்த்து திருவிழாக்கள் எல்லாம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் ஜுன் 1. ஆம் தேதி கோவில்களை திறக்க அரசு அனுமதி வழங்கி இருப்பதாக தெரிகிறது. அதனால் இறை பக்தர்கள் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். மேலும் இப்போது கோவில்கள் திறக்கப்பட இருப்பதால் “அடுத்த தளர்வு எதுவாக இருக்கும்?” என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தியேட்டர் அதிபர்கள் அமைச்சர் கடம்பூர் ராஜுவைச் சந்தித்து தியேட்டர்களைத் திறக்க கோரிக்கை வைத்துள்ளதால் விரைவில் திரையரங்குகளும் ஓப்பன் ஆகலாம் என்றே தெரிகிறது