ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை டாப்ஸி, தற்போது பாலிவுட்டில் கோலோச்சி வருகிறார். ‘பிங்க்’ படம் அவருக்குக் கொடுத்த வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டு அதற்கு ஏற்றார் போல் பிற கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்தும் வருகிறார். அவர் மீது சக நடிகைகள் பொறாமை கொள்ளும் அளவிற்கு அவரின் வளர்ச்சி இருந்து வரும் சூழலில், ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்கும் கங்கணா ரணாவத்தின் சகோதரி, ரங்கோலி சாண்டல் முன்னர் ஒரு முறை“டாப்ஸி என் சகோதரியான கங்கணாவின் சீப்பான காப்பி” என்று கிண்டலடித்திருந்தார். தற்போது பிரதமர் நாளை இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை அணைத்துவிட்டு, அகல் விளக்கு, டார்ச் லைட், மெழுகுவர்த்தி போன்றவை ஏற்றச் சொல்லி டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக டாப்ஸி, “அடுத்த ஜாஃப் வந்துவிட்டது, ஹே.ஹே.ஹே” என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவிற்கு, “இது சாதாரணமான ஜாப் தானே..? இதற்கு ஏன் பி கிரேட் நடிகைகள் இவ்வளவு சூடாக வேண்டும்” என்று கேள்வி எழுப்பி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார் ரங்கோலி.