தமிழகத்தில் இன்றைய முதன்மைச் செய்தியாக மாறியிருக்கிறது சசிகலா எடப்பாடி விவகாரம். அ.தி.மு.க-வின் முக்கியத் தூணாக இன்று இருப்பவர் எடப்பாடி என்பது அனைவரும் அறிந்ததே. அதே சமயம் சசிகலாவும் அ.தி.மு.க-வை தன்வசப்படுத்தும் வேலைகளில் இறங்கியுள்ளார். முதற்கட்டமாக சிறையில் இருந்து வெளிவந்த சசிகலா கட்சி கொடியுடன் ஊர்வலம் புறப்பட்டார். அதற்கு கடும் எதிர்ப்பும் போலீஸ் தரப்பில் நெருக்கடியும் இருந்ததால் கொடி சசிகலா காரில் அகற்றப்பட்டது. ஆனால் நேற்று சசிகலா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் அ.தி.மு.க-வின் அவைத்தலைவர் மதுசூதனனைப் பார்க்க வந்த பொழுது தன் காரில் கட்சி கொடி கட்டி கம்பீரமாக வந்தார். அப்போது எடப்பாடியின் காரும் எதிரில் வந்தது. ஆனால் இருவரும் ஒருவரையொருவர் பார்க்கவே இல்லை. இருந்தாலும் சசிகலா எடப்பாடி எதிரில் கட்சிகொடியோடு வலம் வந்தது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.