Tamil Movie Ads News and Videos Portal

தமிழில் டப்பிங் செய்யப்படும் இராஜமவுலி-யின் திரைப்படம்

மகரதீரா, நான் – ஈ, பாகுபலி திரைப்படங்களின் மூலம் இந்தியத் திரையுலகில் முக்கியமான இயக்குநராக மாறியிருக்கும் இயக்குநர் இராஜமவுலி தற்போது ராம்சரன், ஜூனியர் என்.டி.ஆர், அலியா பட் ஆகியோர் நடிப்பில் ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியின் மூலம் இராஜமவுலி என்கின்ற பெயர் மக்கள் கூட்டத்தை கவரும் ஒரு மிகச்சிறந்த மார்க்கெட்டிங் உத்தியாக மாறியுள்ளது. இதனை பயன்படுத்த நினைக்கும் சிலர் அவரின் முந்தைய தெலுங்குப் படங்களை பிற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடும் உரிமையை வாங்கியுள்ளனர். அந்த வகையில் 2007ம் ஆண்டு ஜூனியர் என்.டி.ஆர், ப்ரியாமணி, மம்தா மோகன்தாஸ், குஷ்பு, மோகன் பாபு நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி ’யமதொங்கா’ படத்தை ‘விஜயன்’ என்ற பெயரில் தமிழில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். சுதிஷா எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் இப்படத்தை வெளியிடவிருக்கிறது.