தமிழ்சினிமாவில் பா ரஞ்சித் வீச இருக்கும் அடுத்த குண்டு. ஓர் பாசிட்டிவ் நியூஸ்
தமிழ்சினிமாவில் பா.ரஞ்சித் வருகைக்குப் பிறகு ஒடுக்கப்பட்டவர்களின் குரல் திரையில் ஓங்கி ஒலிக்கும் நிலை வந்துள்ளது. அவர் இயக்கிய மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்கள் எல்லாம் நேரடியாக சாதி அரசியலைப் பேசின. அவர் தயாரித்த பரியேறும் பெருமாள் படம் சாதி குறித்த உரையாடலுக்கு சமூகத்தையே அழைத்தது. மேலும் இப்போது பா.ரஞ்சித் தயாரிப்பில் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்ற படம் தயாராகி வரும் டிசம்பர் ஆறாம் தேதி வெளியாக உள்ளது. இப்படமும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான படமாகவும் அதேநேரம் பக்கா கமர்சியல் மெட்டிரியலாகவும் இப்படம் தயாராகி இருப்பதாக கோலிவுட் கிசுகிசுக்கிறது. இப்படத்தின் பாடல்கள் நாளை வெளியாக இருக்கிறது