Tamil Movie Ads News and Videos Portal

விளையாட்டு துறை அமைச்சருக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது!

சென்னையில் நடிகர் மற்றும் மாண்புமிகு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நடித்து விரைவில் வெளி வர உள்ள கண்ணை நம்பாதே படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடை பெற்றது.
உதயநிதி அவர்கள் அமைச்சரான பிறகு கலந்து கொள்ளும் முதல் சினிமா விழா இதுவாகும். இந்த விழாவில் உதயநிதி அவர்களுக்கு பொன்னாடைக்கு பதிலாக அரசு பள்ளி மாணவர்கள் பயனுறும் வகையில் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்க பட்டது. அதை மகிழ்வுடன் பெற்றுக்கொண்ட அமைச்சர் பேசும்போது, பத்திரிகையாளர்ளுக்கு நன்றி தெரிவித்த உதயநிதி அவர்கள் இதை பள்ளி மாணவர்களுக்கு தான் கொண்டு சேர்த்து விடுகிறேன் என்று மகிழ்வுடன் தெரிவித்தார்.