Tamil Movie Ads News and Videos Portal

பூஜாவை வெளியேற்றிவிட்டு மீண்டும் வரவேற்கும் தமிழ் சினிமா

மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை பூஜா ஹெக்டே. இவரை டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை பல இலட்சங்கள். இந்தளவிற்கு வரவேற்பு இருக்கும் பூஜாவைத் தான் முகமூடி படத்திற்குப் பின்னர் தமிழ் சினிமா ராசியற்ற நடிகை என்று ஒதுக்கியது. அதனைத் தொடர்ந்து தெலுங்குப் படங்களில் நடிக்கத் தொடங்கிய பூஜா ஆரம்பத்தில் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்தார். பின்னர் மெல்ல மெல்ல தனக்கான இடத்தை பிடித்தவர், 2018ம் ஆண்டு மகரிஷி படத்தில் மகேஷ் பாபு ஜோடியாக நடித்தார்.

படம் சூப்பர் டுப்பர் ஹிட். பின்னர் 2019ம் ஆண்டில் அல்லு அர்ஜூன் ஜோடியாக நடித்த அல வைகுண்டபுரம்லு படமும் ஹிட்டடிக்க ராசியான நடிகையாக மாறினார். தற்போது தமிழ் சினிமா இயக்குநர்கள் மீண்டும் பூஜாவைத் துரத்தத் துவங்கினர். அதன் விளைவாக ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் புதிய படமான ‘அருவா’ படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயின் ஆகவிருக்கிறார். ஆக அதிர்ஷ்டமில்லாத நடிகை என்று ஒதுக்கிய தமிழ் சினிமா இன்று அவர்களை வரவேற்கத் தொடங்கிவிட்டது.