ட்ரீட்மெண்ட் புதுசா இருந்தா சொப்பன சுந்தரி காரைக் கூட சொகுசு காரா மாற்ற முடியும். யெஸ் டக்கரில் அந்த மேஜிக் முயற்சிக்கப்பட்டிருக்கு..
ஹீரோவிற்கு பணம் இல்லாதது பிரச்சினை. ஹீரோயினுக்கு பணக்காரரா இருக்குறது பிரச்சனை. உன் பிரச்சனையை நான் சரி செய்றேன். என் பிரச்சனையை நீ சரிசெய் என ஒரு கட்டத்தில் ஹீரோயின் ஹீரோவிடம் டீல் பேசுகிறார். But நம்ம ஹீரோ 80கிட்ஸ் ரேஞ்சில் இதயத்தை நீட்டுகிறார். That time தான் படத்தில் மிக முக்கியமான time. “லவ் என்பது ஒரு மேட்டரே இல்லை..மேட்டர் என்பதிலே லவ் சாப்டர் முடிந்துவிடுகிறது” என்கிறார் ட்ரெண்டில் இருக்கும் நம் 2K கிட் ஹீரோயின். இதற்குப் பின்னால் திருமணத்திற்காக ஹீரோயினை துரத்தும் வில்லன், காருக்காக ஹீரோவை துரத்தும் வில்லன்.. என ஹீரோ, ஹீரோயினுக்கு நெருக்கடிகள் அதிகமாக இருவரும் அம்மி வில்லன்ஸை எப்படி டம்மியாக்கினார்கள் என்பதே மீதிக்கதை
“சித்தார்த் இன்னும் பாய்ஸ் கேட்டகிரி தான் பாஸ்” எனச்சொல்லும் அளவிற்கு இளைமையோடு இருக்கிறார். ஹீரோயினை லிப்லாக் பண்ணும் காட்சிகள் மட்டுமல்லாமல் எல்லாக் காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார். சண்டைக்காட்சிகளில் அவரது உழைப்பு தெரிகிறது. மலரில் விழுந்த மாதுளைச் சாரு போல மென்மையும் வெண்மையுமாக அழகில் கிறங்கடிக்கிறார் ஹீரோயின் திவ்யன்ஷா கெளசிக். அழகு மகிழ வைக்கிறது என்றால் நடிப்பும் ஒருசில இடங்களில் நெகிழ வைக்கிறது. வில்லன் டீம் ஆட்களில் யோகிபாபு ஆங்காங்கே ஆசுவாசம் அளிக்கிறார். ஆர்.ஜே விக்னேஸ் ஒருசில காட்சிகளில் நன்றாக காமெடி செய்து சிரிக்க வைத்துள்ளார். முனிஷ்காந்த் இரண்டு காட்சிகளில் சிரிக்க வைக்கிறார்.
நிவாஸ்.கே பிரசன்னா டெக்னிக்கல் டீமில் பிரகாசிக்கிறார். பின்னணி இசையும் பாடல்களும் தரமாக அமைந்துள்ளது. கண்களைத் துருத்தாத ஒளிப்பதிவு கலக்குகிறது
கதை என்று எடுத்துக் கொண்டால் மிகவும் பழைய கதை தான். அதைக் காட்சிப்படுத்திய விதத்தில் கவனம் ஈர்க்கிறார் இயக்குநர் கார்த்திக் கிரிஷ். வசனங்களில் அங்கங்கு இன்னும் சுவாரஸ்யம் சேர்த்திருக்கலாம். முக்கியக் கேரக்டர்களுக்கு பெரும் பிரச்சனைகளாக தெரியும் விசயங்கள் படம் பார்க்கும் ஆடியன்ஸுக்கு சீரியசாக தெரியாததால் படம் கனெக்ட் ஆக மறுக்கிறது. பின்பாதியில் படத்தின் களம் மொத்தமும் காமெடி என்பதால் மேற்சொன்ன அந்தக் குறைகளை மறந்து ரசிக்க முடிகிறது
எப்படியானாலும் டக்கரில் சில சூப்பர்கள் இருப்பதால் டக்கென டிக்கெட்டை Book பண்ணலாம்
3/5
-மு.ஜெகன் கவிராஜ்
#Takkar #டக்கர்