Tamil Movie Ads News and Videos Portal

டேக் டைவர்ஷன்- விமர்சனம்

ஒரு 70 kid, ஒரு 90 kid then one 2K kid என இவர்களுக்குள் நிகழும் காதல் சார்ந்த சமாச்சாரங்களும், ஒரு காமநோய் கொண்ட ஐடி மேனஜர் செய்யும் அட்ராசிட்டியும் தான் டேக் டைவர்ஷன் படத்தின் கதை.

ஹீரோ சிவகுமார் ஓர் 90 கிட். அவர் தன் நிச்சயதார்த்திற்காக பாண்டிச்சேரிக்கு காரில் செல்கிறார். அவரது மேலதிகாரியான ஜான்விஜய் ஒரு பெண்ணை வரும்வழியில் தன்னிடம் கொண்டுவந்து விடும்படி சொல்கிறார். அந்தப்பெண்ணோடு செல்லும் சிவகுமாருக்கு அடுத்தடுத்து சில டேக் டைவர்ஷன்ஸ் வர..அடுத்து என்னானது என்பதே டேக் டைவர்ஷன்

நல்ல நடிப்பை கொடுக்க கூடிய வாய்ப்பிருந்தும் அதை மிஸ் பண்ணியிருக்கிறார் ஹீரோ சிவகுமார். 70 kid ஆக வரும் ராம்ஸ் ஒருசில இடங்களில் ok ரகம். ஜான் விஜய் சிரிப்பேற்றுவதாக நினைத்து கடுப்பேற்றுகிறார். இரு ஹீரோயின்களுமே மிகை நடிப்பால் நகைகொள்ள வைக்கிறார்கள்.

டெக்னிக்கலாகவும் படம் பெரிதாக ஈர்க்கவில்லை. படத்தில் பின்னணி இசை பாடல்கள் இரண்டிலும் இன்னும் உழைத்திருக்கலாம். ஒளிப்பதிவிலும் பெரிய நேர்த்தியில்லை

இந்தப் படத்தின் கதையை ஒன்லைன்& அவுட்லைன்- ஆக கேட்டால் எல்லோருக்கும் பிடிக்கும். அவ்வளவு கமர்சியல் மெட்டிரியல் கதை இது. ஆனால் அதை படமாக்கியதில் சொதப்பியிருப்பதால் நாமும் படம் பார்க்கும் போது டேக் டைவர்ஷன் ஆகிவிடுகிறோம்

-மு. ஜெகன் கவிராஜ்