சூர்யாவைப் பாட வைத்ததால் ஆசை நிறைவேறியது – ஜி.வி.பிரகாஷ்
‘இறுதிச்சுற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் சூரரைப் போற்று. இந்தியாவின் முதல் பைலட்ட்டான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் அபர்ணா பாலமுரளி சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார் படத்தின் முன்னோட்டப் பாடலில் நடிகர் சூர்யாவையே பாட வைத்திருக்கிறார். அது குறித்து அவரிடம் கேட்டபோது, “நடிகர் சூர்யாவின் குரல் வித்தியாசமாக அழகாக இருக்கும். அவரை எனது இசையில் பாட வைக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. அது தற்போது நிறைவேறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது..” என்று தெரிவித்துள்ளார்.