“காப்பான்” திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது சூர்யா நடிப்பில் ‘சூரரைப் போற்று’ படம் ரீலீஷுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து, சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் படத்தை தாணு தயாரிக்கவிருக்கிறார்.
படங்களில் நடிப்பதோடு மட்டுமின்றி, தனது 2D எண்டெர்டெயின்மெண்ட் மூலமாக தரமான படங்களை தயாரித்தும் வருகிறார் சூர்யா. மேலும் ‘அகரம் பவுண்டேஷன்’ மூலமாக ஏராளமான மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவியும் அளித்து வருகிறார். தற்போது தனது 2D எண்டெர்டெயின்மெண்ட் மூலமாக காவல்துறைக்கு 50 சிசிடிவி கேமராக்களை வாங்கிக் கொடுத்திருக்கிறார் சூர்யா. இது தொடர்பாக இந்நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் இராஜசேகர் பாண்டியன் கூறும் போது “வரும்காலத்தில் இது போன்ற சமூகப்பணிகளை 2D நிறுவனம் செய்யும்..” என்று கூறியிருக்கிறார்.