சூர்யா நடிப்பில் ‘இறுதிச்சுற்று’ சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “சூரரைப் போற்று”. இப்படத்தில் சூர்யா முன்னால் பைலட் கோபிநாத் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அபர்ணா பாலமுரளி நாயகியாக நடித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்ப்பைப் பெற்ற நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
வீடியோ முழுக்கவே சூர்யா உடற்பயிற்சி செய்வது போன்ற காட்சி தொகுப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த மேக்கிங் வீடியோவை இதுவரைக்கும் 15 இலட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் பார்த்து தங்களது வரவேற்ப்பை தெரிவித்துள்ளனர்.