‘இறுதிச்சுற்று’ புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “சூரரைப் போற்று”. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் ஒரு பாடலை சூர்யா பாடவும் செய்திருக்கிறார். சில வாரங்களுக்கு முன்னர் வெளியான இப்படத்தின் டிரைலர் நல்ல வரவேற்ப்பைப் பெற்றுள்ள நிலையில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.
மேலும் இப்படத்தின் இசை வெளியீடு விழாவை விமானநிலையத்திலேயே நடத்தலாம் என்று படக்குழு முடிவு செய்திருக்கிறதாம். ஏனென்றால் கதைப்படி பட்ஜெட் விமான சேவையை தொடங்கிய ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இப்படம் உருவாகி இருக்கிறது. மேலும் படத்தின் பல காட்சிகள் விமானத்திலேயே பல லட்சங்கள் செலவு செய்து உருவாக்கப்பட்டிருப்பதால் இசை வெளியீடும் விமான நிலையத்திலேயே நடைபெறவிருக்கிறது.