நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சுதா கொங்கரா இயக்கத்தில் தான் நடித்திருக்கும் “சூரரைப் போற்று’” திரைப்படம் தனக்கு வெற்றியினைப் பெற்றுத் தரும் என்று சூர்யா நம்பி வருகிறார். கொரோனா பாதிப்பினால் பட வெளியீடு தள்ளிப் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த தருணங்களை நடிகர் மற்றும் நடிகைகள் கதை கேட்கும் நிகழ்விற்காக பயன்படுத்தி வருவதால், அவர்கள் நடிக்கவிருக்கும் புதிய படங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகி வருகிறது.
அந்த வரிசையில் சூர்யா அடுத்ததாக ஹரி இயக்கத்தில் ‘அருவா’ வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ போன்ற படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். மேலும் ‘கூட்டத்தில் ஒருவன்’ படத்தினை இயக்கிய ‘ஞானவேல்’ இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படம் இருளர் இன மக்களின் வாழ்க்கையையும் அவர்களின் வலியையும் பேச இருக்கிறது. இதில் சூர்யா வக்கீலாக நடிக்கவிருக்கிறார். என்று செய்தி வெளியாகியுள்ளது.