Tamil Movie Ads News and Videos Portal

ரெஜினா கஸ்ண்ட்ராவின் சூர்ப்பனகை

வெறுமனே மரத்தை சுற்றி டூயட் பாடும் ஹீரோயினாக அல்லாமல் மாறுபட்ட கதாப்பாத்திரங்கள் மீது நாட்டம் கொண்டு, வித்தியாசமான படங்களாக தேடி நடித்து, தனக்கென தனிச்சிறப்பான இடத்தை பிடித்துள்ளார் நடிகை ரெஜினா கஸண்ட்ரா. தெலுங்கில் அவர் எதிர்மறை பாத்திரத்தில் நடித்த “எவரு” பெரு வெற்றி பெற்ற நிலையில் அவரது அடுத்தடுத்த படங்களும் பெரும் நம்பிக்கை அளிக்கும் தரமான படங்களாக இருக்கின்றன.

தமிழிலும் அவர் அடுத்தடுத்து எதிர்பார்ப்பு மிக படங்களில் நடித்து வருகிறார் ரெஜினா கஸண்ட்ரா. “திருடன் போலிஸ்” படப்புகழ் இயக்குநர் கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரெஜினா கஸண்ட்ரா முதன்மை பாத்திரத்தில் நடிக்கும், மர்ம வகை திரில்லர் படம் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். விஜய் சேதுபதி வெளியிட்ட ரெஜினா கஸண்ட்ராவின் “சூர்ப்பனகை” ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரு வரவேற்பை பெற்று வருகிறது.