கொரோனா பாதிப்பால் இந்தியாவெங்கும் உள்ள திரைப்படத் தொழிலாளிகளில் அன்றாடக் கூலிகள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த இக்கட்டான சூழலில் அவர்களின் குடும்பங்களின் பசியை போக்கும் எண்ணத்தில் நன்கொடை வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாலிவுட் உலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் அமிதாப்பச்சன் ஒரு லட்சம் திரைப்பட தொழிலாளிகளின் குடும்பத்திற்கு தேவையான உணவு மற்றும் மளிகைப் பொருட்களை கொடுக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார்.
வி.ஆர்.ஒன் ஆதரவுடன் சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸ் குழுமத்துடன் சேர்ந்து இந்த உதவியை செயலாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள். இதற்காக இந்தியாவில் இயங்கி வரும் மிகப்பெரிய ஹைபர் மார்கெட் மற்றும் மளிகை கடைகளின் லிஸ்ட் தயாராகி வருகிறது. மேலும் இந்தியா சினிமா கூட்டமைப்பின் தொழிலாளர்களுக்கு பார்கோடு உடைய கூப்பன்கள் தரப்படவுள்ளன. இதனையடுத்து மேலும் உதவித் தொகை தேவைப்படும் தொழிலாளர்களுக்கு உதவவும் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.