Tamil Movie Ads News and Videos Portal

‘நைட்ரோ ஸ்டார்’ சுதீர் பாபு படத்தின் டைட்டில் வெளியீடு!

ஸ்ரீ சுப்ரமணியேஸ்வரா சினிமாஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுமந்த் ஜி. நாயுடுவின் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் ஞானசாகர் துவாரகா இயக்கத்தில் தயாராகும் ‘நைட்ரோ ஸ்டார்’ சுதீர் பாபுவின் 18 ஆவது திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

‘நைட்ரோ ஸ்டார்’ சுதீர் பாபு வித்தியாசமான ஜானரிலான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அவர் நடிக்கும் கதாபாத்திரங்களின் நம்பகத்தன்மைக்காக உடலமைப்பில் மாற்றங்களையும் செய்து நடிக்கிறார். ஒவ்வொரு படத்திற்கும் அவரின் உடல் மொழி மற்றும் தோற்றப்பொலிவில் மாறுபாட்டை நாம் காணலாம்.

இதற்கான அறிவிப்பு, வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட போஸ்டருடன் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் தெற்கு மும்பையை சேர்ந்த அருண் கோலி என்பவரிடமிருந்து சித்தூர் மாவட்டம் குப்பத்தை சேர்ந்த சுப்ரமணியம் என்பவருக்கு எழுதிய உள்நாட்டு கடிதமும், அதில் ” அவசரம்: உங்களது வருகை அவசியமானது” என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த கடிதத்துடன் துப்பாக்கி, தோட்டாக்கள், பழைய ரூபாய் நோட்டு, தொலைபேசி மற்றும் சுருட்டு ஆகியவைகளும் இடம்பெற்றிருக்கிறது. இதனுடன் கிராமத்து சூழலின் பின்னணியில் ஆலயம் ஒன்றும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் ‘அக்டோபர் 31ஆம் தேதி மாஸான சம்பவம்’ என்றும் தயாரிப்பாளர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

#SudheerBabu #சுதீர்பாபு