சிறந்த உள்ளடக்கம் கொண்ட கதைகளை பார்வையாளர்களுக்கு வழங்கி வருவதன் மூலம் சோனி லிவ், ஓடிடி உலகில் தனது தனித்தன்மையை நிரூபித்துள்ளது. அதன் உயர்தரமான விஷூவல், ஒலியின் தரம், கதையின் தன்மை என சிறந்த பொழுதுபோக்கு அம்சங்கள் மூலம் தொடர்ச்சியாக தன்னுடைய பார்வையாளர்களைத் தக்க வைத்து வருகிறது. இப்பொழுது மற்றொரு பிரம்மாண்டமான படைப்பான ‘ஸ்டோரி ஆஃப் திங்ஸ்’ வருகிற ஜனவரி 6, 2023-ல் ப்ரீமியர் ஆக இருக்கிறது.
‘ஸ்டோரி ஆஃப் திங்ஸ்’ என்பது மனிதர்களைச் சுற்றி நடக்கும் கதைகளின் தொகுப்பு மற்றும் பொருட்களுடனான அவர்களின் தொடர்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆந்தாலஜி அடிப்படையிலான திரைப்படம். இது மனித கதைகள் மற்றும் உணர்ச்சிகளுக்கு இடையிலான உண்மை மற்றும் அதற்கு அப்பால் இருக்கும் வெளியை நோக்கி நகரும் கதையாக அமையும்.
இந்த கதைத் தொகுப்புகளுக்கு ‘Cellular’, ‘Weighing Scale’, ‘Compressor’, ‘Car’ & ‘Mirror’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதையும் மனித உணர்ச்சிகளை ஆராய்கிறது மேலும் அங்கு பொருள் ஒரு முக்கிய கதாபாத்திரமாக இருக்கிறது.
‘Mirror’ கதையில் வினோத் கிஷன் & அன்ஷிதா ஆனந்த், ‘Cellular’ கதையில் அதிதி பாலன், கெளதமி தடிமல்லா மற்றும் அர்ஜூன் ராதாகிருஷ்ணன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘Car’ கதையில் சாந்தனு பாக்யராஜ், சித்திக் KM மற்றும் அர்ச்சனா ஆகியோர் நடித்துள்ளனர். பரத் நிவாஸ் & லிங்கா ‘Weighing Scale’ கதையில் நடித்துள்ளனர். ரித்திகா சிங் & ரோஜூ ‘Compressor’ கதையில் நடித்துள்ளனர். ஜார்ஜ் K ஆண்டனி இயக்கியுள்ள இந்தப் படத்தை Chutzpah Films தயாரித்துள்ளது.