Tamil Movie Ads News and Videos Portal

“ஸ்டாப் இட்” – ஸ்ருதிஹாசன் கோபம்

கொடிய வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நடிகர் கமல்ஹாசன் மற்றும் அவரது இரண்டு மகள்களான ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷராஹாசன் ஆகியோர் ஒவ்வொருவருமே தங்களை தனிமைப்படுத்தி இருக்கின்றனர். மேலும் தங்களின் தேவைகளை பணியாளர்கள் இன்றி தாங்களே செய்தும் வருகின்றனம். ஸ்ருதிஹாசன் ஒருபடி மேலே போய், வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான ஆயுர்வேத சோப் தயாரிக்கும் பணியிலும் இறங்கியுள்ளார்.

இந்நிலையில் இந்த வைரஸின் பிறப்பிடம் சீனா என்பதால், பலரும் போதிதர்மரைக் கூட்டி வந்து இந்த வைரஸிடம் இருந்து எங்களைக் காப்பாற்றுங்கள் தாயே என்று ஆரம்பத்தில் இருந்தே மீம்ஸ் வெளியிட்டு வந்தனர். அதை ஆரம்பத்தில் மிகவும் ரசித்து தனது பக்கத்தில் ஷேர் செய்து வந்த ஸ்ருதிஹாசன், தற்போது அந்த மீம்ஸ் கிண்டல் எல்லைத் தாண்டி செல்வதைக் கண்டு நொந்து போனவராக, “ஸ்டாப் இட். ஸ்டாப் தி மீம்ஸ்” என்று பதிவிட்டுள்ளார்.